புதுப்பிப்பு - நிகழ்நிலையும் இற்றையும்!

அண்மையில, ஒரு இடுகை-ல போட, 'Update:' ங்கறதுக்கு இணைச்சொல் தேவைப்பட்டது. சரி-னு சிந்திச்சு பாத்ததுல 'புதுப்பிப்பு' சரியா இருக்கும்னு நினைச்சு, அதையே இடுகையில போட்டும் விட்டேன். ஆனா மனசு சும்மா இருக்குமா? அப்படியே சுற்றத்துகிட்டயும், நட்புகிட்டயும், ஒரு கேள்வியத் தொடங்கி விட்டேன் - 'Update:' க்கு இணைச்சொல் என்ன-னு.
அடுத்தநாள் நண்பர் ஒருவர்-ட்ட இருந்து பதில் வந்துச்சு.

நண்பர்:
Update - நிகழ்நிலைப்படுத்துதல் அல்லது இற்றைப்படுத்துதல்
நான்:
பரவா இல்லை.. புதுப்பிப்பு - இதுவே நல்லா இருக்கு..
நண்பர்:
சரி.. சும்மா தகவலுக்காக சொன்னேன்..
நான்:
தகவல் நல்லாத் தான் இருக்கு.. நிகழ்-நிலைப்-படுத்துதல் சரி.. ஆமா.. இற்றைனா என்னா? அப்புறம், சொந்த தகவலா - இல்லைனா எங்க இருந்து புடிச்சீங்கனு சொல்லுங்க..
நண்பர்:
இற்றைன்னா என்னன்னு எனக்கும் தெரியல.. தெரியவந்தா சொல்றேன்.. பொருள் நன்றி : விக்சனரி
நான்:
இற்றை - இன்று. adv. To-day; இன்றைக்கு. பொருள் நன்றி - சென்னைப் பல்கலை - தமிழகராதி..
அதனால, இற்றைப்படுத்துதல் - இன்றுபடுத்துதல்
நண்பர்:
நன்று

அப்புறம் வீட்டுல இதப்பத்தி பேசிக்கிட்டிருந்தப்ப, எனக்கு வைரமுத்துவின் வரிகள்: "அற்றைத் திங்களந்நிலவில்" நினைவுக்கு வந்துச்சு..
அற்றை - அன்று
அதே போக்குல தேடிப்பாத்தா,
எற்றை - என்று

இதெல்லாம்விட, இன்னும் ஒரு அருமையான, வழக்கத்தில் இருக்கற சொல்-பொருள்:
ஒற்றை - ஒன்று!
அட, பிற்றை - பின்று [பின்பு]
மூற்றை - மூன்று

ஆராய்ந்து பாத்தா,
'ற்றை'- 'ற்று'+ஐ;
'ற்று' - றகரம்: இலக்கணவிதி ஏதாவதின்படி னகரம் ஆகி, 'ன்று' ஆகியிருக்கலாம்!

ஆகா, ஆகா, இதப்போல சொற்கள், இலக்கணம் வேறெங்கும் உண்டா?

'யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!' - பாரதி

பி.கு.: நாங்கலாம் தமிழெழுத தமிழ்99-க்கு மாறிட்டோம், நீங்க எப்ப மாறப் போறீங்க?

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இற்றைப்படுத்துதலோட பொருள் தெரியும். ஆனால், மற்ற சொற்களோட ஒப்பிட்டுப் பார்த்தது இல்லை. அருமையா எழுதி இருக்கீங்க. நன்றி.

சந்தனமுல்லை said...

//"அற்றைத் திங்களந்நிலவில்" /இலக்கணவிதி ஏதாவதின்படி னகரம் ஆகி, 'ன்று' ஆகியிருக்கலாம்!//


இந்த தகவல் நல்லா இருக்கே! சுட்டிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

நிஜமா நல்லவன் said...

பயனுள்ள பதிவு. ரொம்ப நன்றி!