ஃபயர்பாக்ஸ்-2 உம் தமிழ் ஒருங்குறியும்!

வலைப்பதிவு எழுதத் தொடங்கியப்ப, எனக்கு இந்த பிரச்சனை இருந்துச்சு.. பதிவின் இடுகைகள் தலைப்பிலும் வேறசில இடங்களிலும், ஒற்று சார்ந்த சார்பெழுத்துகள் மெய்யும் ஒற்றும் தனித்தனியா, "தணிகா"-னு அடிச்சா "தண ிக ா"-னு வந்துச்சு.

என்னடா இது, இப்படி வருதே-னு பாத்தா, ஃபயர்பாக்ஸ்.2-ல தான் இதைப்போல வந்துச்சு! ஃபயர்பாக்ஸ்-3 பீட்டா-லயும், ஐ.ஈ-லயும், சரியாத்தான் இருந்துச்சு!

இதைப்பத்தி இணையத்துல பாத்ததிலும், சிலர்கிட்ட கேட்டதிலும், CSS-க்கும் ஃபயர்பாக்ஸ் தமிழ் ஒருங்குறிக்கும் நடுவுலதான் பிரச்சனைனு புரிஞ்சது. அதாவது, பதிவோட முன்வடிவுல(template) CSS-ல எங்கலாம் "letter-spacing" அல்லது "justify" வருதோ, அங்கலாம் சார்பெழுத்துகள் பிரிஞ்சு பிரிஞ்சு, தப்புத் தப்பா வருது..

அன்பர்ல பலர் இதை கவனிச்சிருக்க மாட்டீங்க. இதுக்கு தீர்வு என்னனா, பதிவோட வடிவமைப்புல "Edit HTML"-ல போய் "Expand Widget Templates"-ஐ இயக்கி, எந்த வரியில எல்லாம் "letter-spacing" அல்லது "justify" வருதோ, அங்கலாம் '//' போட்டு அதை 'குறிப்பா'(comment) ஆக்கிடணும்.

அப்படித்தான் என் பதிவுல பல இடங்களை படிக்கும்படியா ஆச்சு!

மத்தவங்க பதிவுகள்-ல இப்படி வந்தா "GreaseMonkey" ஃபயர்பாக்ஸ் நீட்சியை நிறுவி, MozTxtAlignFix Script பயன்படுத்தவும். - நன்றி ரவி-யின் இடுகை

பி.கு.: வெற்றி! இந்த இடுகை முழுசா தமிழ்99 விசை-ல அடிச்சேங்க!
[கத்துக்கறதுனால அடிக்கறதுக்கு எக்கச்சக்க நேரம் ஆச்சுங்கறது வேற ஒன்னு.. ஆனா கைவந்தப்புறம் வேகமா அடிக்கலாமில்ல!]

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ்99 குறித்த உங்கள் உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆமா, கத்துக்கிட்ட பிறகு நல்லா வேகமா எழுதலாம்.

பிறரின் வலைப்பதிவுகளில் அப்படி தமிழ் எழுத்துகள் பிய்ந்து தொங்கினால், அதற்குரிய தீர்வுக்கு இங்கு பார்க்கவும்.

தோகை said...

ரவிசங்கருக்கு,
நன்றி.. இப்போ ஓரளவுக்கு முன்னேற்றம் :-)
தாங்கள் கொடுத்த தகவல் சேர்த்து விட்டேன்.