தொரட்டிக் கண்ணு கருவாச்சியே!

கொஞ்ச நாள் முன்ன, முழுவரிசை-ல போட்டிருந்த பருத்திவீரன் படப்பாடல்-ல சினேகன் எழுதன ஒரு வரி:
"தொரட்டிக் கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. "

இதுல, தொரட்டி/துரட்டி-ங்கற வார்த்தை கேள்வியே பட்டதில்லையே-னு சிந்திச்சா, இடம் பொருள் வச்சி அது அருவா போல ஒரு ஆயுதம்-னு பட்டுச்சு, சரி, மேல ஆராய்வோம்னு, "தமிழ் தெரிஞ்ச" நண்பர் ஒருவர்கிட்ட கேட்டேன்..

நான்: 'தொரட்டிக் கண்ணு கருவாச்சி' - தொரட்டி/துரட்டி - ஆயுதமா இருக்கலாம், என்ன-னு தெரியுமா?

நண்பர்: ஹ்ம்ம்ம்,, நானும் அருவா மாதிரி தான்-னு நெனைக்கறேன்.. தெரியல.. பாத்து சொல்றேன்..

அடுத்த நாள்-
நண்பர்: உண்மையிலேயே அழகானதொரு உவமை.. கண்ணுக்கு..! அந்த ஆயுதம் வேறெதும் இல்லை..
அலக்கு.. tamil lexicon ல பார்த்தேன்..

நான்: அலக்கு-ஆ.. அப்டின்னா?!

: அலக்கு பாத்ததில்லையா.. நீண்ட கம்பு ஒன்றின் நுனியில் கொக்கி (அ) சிறிய கதிர் அரிவாள் மாதிரியான ஒரு உலோக ஆயுதம் இணைக்கப்பட்டிருக்கும்.. கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் பழங்கள் பறிக்க.. கிளைகளை வளைத்து கொடுக்க உபயோகப்படுத்தப்படுவது..
மாட்டி இழுக்கறதுன்னு வைச்சுக்கலாம்.. இப்போ அந்த உவமை புரியுதா..
சுண்டி இழுக்கும் கண்கள் அப்டீன்னு பொருள் படலாம் அந்த உவமை..

நா: அட, நம்ம கொக்கிக்கோல்.. புளி உலுக்குவாங்களே..!

: தெரியல-பா, அலக்கு தான் எங்க பக்கம் சொல்லுவாங்க.. எதுவா இருந்தா என்ன, உவமை தான இங்க பாக்கணும்.. ஆகா.. பிரிச்சிருக்காரு சினேகன்!

நா: அருமை, அருமை, தமிழ் அருமை, தமிழில் கவி அருமை, கவியில் சொல் அருமை!

: அமுதில் விளைந்த கவியல்லவா..

ஆக, இந்த வரிசை, முழுவரிசை மூலம் பாட்டு நெறைய கத்துக்கறனோ இல்லையோ, தமிழ் நல்லா கத்துக்கறேன்!!

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

எங்க ஊர் புதுக்கோட்டை பக்கம் தொடரட்டி-ன்னு தான் சொல்லுவோம். நீங்க சொல்லி தான் இந்தப் பாட்டை கவனிச்சோம். நல்ல உவமை தான்.

AANDHREYE said...

'Thorati' enbathu pothuvaha uyarathil allathu kaikku ettamal irukkum idathil/uyarathil irukkum porutkalai pidithu, izhuthu, vazhaithu kavara payanpaduvadhu. Inrum madurai suttru vattarangalil indha solley neyradiyahavo, allathu thoratikambu enro payanpaatil ulladhu.

Cheers.

தோகை said...

ரவிக்கும், aandhreye-க்கும்,

எங்க ஊர் பக்கம் (வட தமிழ்நாடு) கேட்டதில்ல.. வழங்கப்பட்டு வரும் ஊர்களைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி..

யாத்ரீகன் said...

சுவாரசியமான கவனிப்பு :-) .. நன்றி ..

Bee'morgan said...

ஆகா.. தணிகா... இப்போதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.. :-) புல்லரிக்க வைக்கறியேடா .. :-)